அரசுக்கு எதிரான எனது தந்தையின் குரலை கட்டுப்படுத்தும் முயற்சி-கார்த்தி சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நேற்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. அவரது மகன் கார்த்தி சிதம்பரம் இன்று காலை டெல்லி புறப்பட்ட சென்னை விமான நிலையத்திற்கு சென்றார்.அப்பொழுது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியை அச்சுறுத்தவும்,அரசாங்கத்தை பற்றி நாள்தோறும் ஆழமான விமர்சனங்களை வைக்கும் என்னுடைய தந்தையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும்,அரசியல் ரீதியில் பழிவாங்கும் நடவடிக்கையாகவே  கைது செய்யப்பட்டுள்ளார். அரசுக்கு எதிரான எனது தந்தையின் குரலை கட்டுப்படுத்தும் முயற்சி இது ஆகும்.

எனது தந்தைக்கு மட்டுமல்ல இது காங்கிரசுக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கை ஆகும். சட்டரீதியில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளேன்.எல்லா ஆதாரமும் இருக்கும் என்று சொல்லுபவர்கள் வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டியது தானே என்று கேள்வி எழுப்பினார்.