சபாநாயகர் விதித்த தகுதிநீக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 3 எம்எல்ஏக்கள் மனு!

கர்நாடக சட்ட பேரவையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை 17 எம்எல்ஏக்கள் திரும்பப்பெற்றனர்.  அதன் பின்னர், நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை வாக்கெடுப்பில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு தோல்வி அடைந்தது.

பின்னர் எடியூரப்பா தலைமையிலான பாஜக பெரும்பான்மையை நிரூபித்து. முதலமைச்சராக 4-வது முறையாக பொறுப்பேற்றார் எடியூரப்பா.

இந்த விவகாரத்தில் ராஜினாமா செய்த 17 எம்எல்ஏகலையும் தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர். இந்த நடவடிக்கைக்கு எதிராக, தகுதிநீக்கம் செய்யப்பட்ட, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரமேஷ், மகேஷ் மற்றும் சுயேச்சை  எம்எலஏ சங்கர் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.