எம்எல்ஏக்களின் ராஜினாமாக்களை ஏற்க கூறி உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது! – கர்நாடக சபாநாயகர் பதிலடி!

கர்நாடக சட்டமன்ற அரசியல் களம் தற்போது பரபரப்பாக இயங்கி வருகிறது. இதுவரை கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேர் தங்களது ராஜினாமாவை அளித்துள்ளனர். மேலும் இரண்டு சுயேச்சை எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவாக கொடுத்த வாக்கை வாபஸ் பெற்றுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கர்நாடக சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என 10 எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி கூறுகையில், ‘ கர்நாடகா சபாநாயகர் இந்த ராஜினாமாக்கள் குறித்த இன்றே முடிவெடுக்க வேண்டும். மேலும்,வழக்கு தொடர்ந்த 10 எம்எல்ஏக்களை இன்றே சந்திக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இதற்க்கு பதிலளிக்கும் விதமாக கர்நாடக சபாநாயகர் சார்பில், ‘ ராஜினாமாக்களை ஏற்க சொல்லி உச்ச நீதிமன்றம், சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது.’ என முறையீடு செய்யப்பட்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.