காங்கிரஸ் -பாஜக இடையே கர்நாடகாவில் வலுக்கும் வார்த்தை போர்!

தொடர்ந்து வார்த்தை போரில் ஈடுபடும்  பாஜக-கர்நாடக  காங்கிரஸ் மீண்டும் கருத்து

By Fahad | Published: Apr 03 2020 05:22 PM

தொடர்ந்து வார்த்தை போரில் ஈடுபடும்  பாஜக-கர்நாடக  காங்கிரஸ் மீண்டும் கருத்து யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு பெங்களூருக்கு வந்த உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், மாட்டிறைச்சிக்கு தடை விதிக்காத கர்நாடக அரசு இந்துக்களுக்கு எதிரானது என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்துத்வா அமைப்புகளை சித்தராமையா கடுமையாக விமர்சித்தார். இதனிடையே சித்ரதுர்கா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, கடந்த மூன்று ஆண்டுகளில் கர்நாடகாவில் 20க்கும் மேற்பட்ட பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த அரசு முன்வராதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.. source: dinasuvadu.com