கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக கூட்டத்தில் முடிவு!

கர்நாடக மாநிலத்தின் முதல்வர் பதவியிலிருந்து குமாரசாமி அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் பாஜக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பதவி விலக கோரி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.

கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பான சூழல் இருந்து வரும் நிலையில், இன்று மாலை கர்நாடக மாநில பாஜக எம்.எல்.ஏ. க்கள் கூட்டம் மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்றது.

அப்போது, மாநிலத்தில் ஆட்சி செய்ய எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் மதசார்பற்ற ஜனதா கூட்டணி தான் ஆட்சி செய்யும் தகுதியை இழந்து விட்டதாகவும் உடனடியாக முதல்வர் குமாரசாமி அவர்கள் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும்  உறுப்பினர்கள் கூறியுள்ளனர். அதன் படி, முதல்வர் பதவி விலக கோரி மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.