கவிழ்ந்தது காங்கிரஸ் – மஜக கூட்டணி! மீண்டும் அரியணை ஏறும் பாஜக! யார் அடுத்த முதல்வர்?!

கர்நாடக அரசியலில்  நீடித்து வந்த அரசியல்  குழப்பம் நேற்று முடிவுக்கு வந்தது. நான்கு நாட்களாக நடைபெற்று வந்த சட்டப்பேரவை விவாதங்களை தொடர்ந்து நேற்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி 6 மணிநேரம் கழித்து தான் வந்து இருந்தார். அவர் மிகவும் உருக்கமாக தனது உரையை நிகழ்த்தினார். இந்த அரசின் ஆட்சி ஆரம்பித்ததிலிருந்து பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வந்தது. எனது பதவியை விட்டு எப்போது வேண்டுமென்றாலும் விலக தயாராகத்தான் இருக்கிறேன். 2018ஆம் ஆண்டே நன் அரசியலில் இருந்து விலகி இருப்பேன். சில காரணங்களால் மீண்டும் அரசியலுக்கு வந்தேன் என தெரிவித்தார். மேலும், 6 கோடி கர்நாடக மக்களுக்கும், சபாநாயகருக்கும் எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். என உருக்கமாக தனது உரையை நிகழ்த்தினார்.

பிறகு சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினர். அதில் அரசுக்கு எதிராக 105 வாக்குகள் பதிவாகின. அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகள் பதிவாகின. 20 எம்எல்ஏக்கள் வாக்கெடுப்புக்கு வரவில்லை.  ஆதலால், குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மஜக கூட்டணி அரசு கவிழ்ந்தது.

இதனை தொடர்ந்து பாஜக அரசு ஆட்சி அமைக்க சபாநாயகரிடம் உரிமை கோர உள்ளது. பாஜக சார்பில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாதான் மீண்டும் முதல்வராக கட்சி தலைமையால் தேர்ந்தெடுக்கப்படுவார் என பாஜக தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.