சிக்ஸர் அடிப்பாரா எடியூரப்பா?! கர்நாடக இடைதேர்தல் முன்னிலை நிலவரம்!

  • கர்நாடக சட்டப்பேரவையில் 15 தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 
  • இதில் 6 தொகுதிகளில் வெற்றிபெற்று பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆளும் பாஜக உள்ளது. 

கர்நாடக சட்டப்பேரவையில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. தற்போது அதற்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கர்நாடக சட்டப்பேரவையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மீதம் உள்ள இரண்டு தொகுதிகளுக்கு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை.

இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்த 15 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் கர்நாடக சட்டப்பேரவை தொகுதிகள் 222 ஆக அதிகரித்துள்ளது. இதனால், அங்கு பெரும்பான்மை நிரூபிக்க 112 தொகுதிகளை தன்வசம் வைத்திருக்க வேண்டும், தற்போது ஆளும் பாஜக அரசு 106 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளது.  ஆட்சியை தக்கவைக்க 6 இடங்களை கைப்பற்ற வேண்டும்.

தற்போதுள்ள நிலவரத்தின்படி, பாஜக 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும்,  1 தொகுதியில் மற்ற வேட்பாளரும் முன்னணியில் உள்ளன. மஜத கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னணியில் வரவில்லை.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.