#முக கவசத்தோடு_கந்தர்கவசம்#வழங்க ஆதினம் உத்தரவு!

#முக கவசத்தோடு_கந்தர்கவசம்#வழங்க ஆதினம் உத்தரவு!

பொதுமக்களுக்கு முக கவசத்தோடு கந்தர் சஷ்டி கவசத்தையும், முருக பக்தர்கள் வழங்க காமாட்சிபுரம் ஆதினம் உத்தரவுப்பிறப்பித்துள்ளார்.

கோவை, காமாட்சிபுரம் ஆதினம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:

இந்து தர்மம் காலத்தால் தொண்மையானது. அதிலும் முருக வழிபாடு என்பது மிக முக்கியமானது.மேலும் மலேசியா, இலங்கை, பர்மா மற்றும் போன்ற நாடுகளில் எல்லாம் பல கோவில்களில் முருகன் சிலைக்கு பதிலாக வேல் தான் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. முருகனின் சிறப்பை பல அடியார்கள், புலவர்கள் எல்லாம் பாடியுள்ளனர்.

கந்த சஷ்டி கவசம் என்பது தேவராய சுவாமிகளால் அருளப்பட்டது. கவசம் என்பது உச்சிமுதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளையும் காக்க கடவுளை பிரார்த்திக்கும் ஒன்றாகும்.

கந்தர் சஷ்டி கவசத்தை இழிவுபடுத்துவதை, காவடிக்குழு பக்தர்கள், இனி பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அரசுதக்க நடவடிக்கை இதற்கு எடுக்க வேண்டும். மேலும் வரும் ஆக9ம் தேதி சஷ்டி அன்று முருக பக்தர்கள், காவடிக்குழுவினர் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசத்தோடு, கந்தர்சஷ்டி கவசத்தையும் ஒவ்வொரு வீடு வீடாக சென்று வழங்க வேண்டும்.அதேபோல பங்குனி உத்திரம், தை பூசத்துக்கு திடும்பு இசை வைத்திருப்பவர்களும் சஷ்டி அன்றும் இசை வாசித்து முருகன் அருளால் தீயவர்களுக்கு நல்ல புத்தி வர பிரார்த்தனை செய்வோம் என்று கூறினார்.

author avatar
kavitha
Join our channel google news Youtube