காவியாக மாறிய பெரியார்: பெரியாருக்கு காட்டும் மரியாதையா ? கனிமொழி கேள்வி!

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மீது  காவி வர்ணம் ஊற்றியும், செருப்பு  மாலை அணிவித்து அவமதிப்பு செய்துள்ளனர்.

இச்சம்பவதற்கு கண்டனம் தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர், பெரியார் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் திருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.இந்த அவமரியாதைக்கு பெரியாரிய கட்சிகள் சார்பில் கண்டங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில்  பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக கனிமொழி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது :

திருச்சியில் #பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டுள்ளது.பெரியார் பிறந்தநாள் அன்றுதான் தமிழக பிஜேபி தலைவர் முருகன், “பெரியார் சமூகநீதிக்காக பாடுபட்டவர். அவரை வாழ்த்துவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை” என்றார். இதுதான் அவர்கள் பெரியாருக்கு காட்டும் மரியாதையா ? நீட் , புதிய கல்விக் கொள்கை, விவசாயிகள் போராட்டம் இவற்றுக்கான உங்கள் பதில் பெரியார்தானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
kavitha