தலைவி படத்திற்காக கங்கானா இதை கற்று வருகிறாராம்! ஆனால் அது எளிதான காரியமல்ல!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தலைவி படம் எடுக்கப்பட உள்ளது. இயக்குனர் விஜய் இயக்கும் இந்த படத்தில், ஜெயலலிதாவாக நடிகை கங்கானா நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாக்கி வருகிறது. இப்படம் குறித்து நடிகை கங்கானா அளித்துள்ள பேட்டியில், 'இந்த படத்துக்காக தமிழ் மொழியை கற்பது கடினமாக உள்ளது என்றும், இதன் மூலம் தமிழ் மொழியை கற்பது கடினம் என்றும் உணர்ந்து கொண்டேன். அதனால் வசனங்களை மனப்பாடம் செய்து பேசி, நடித்து வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.