கேரளாவிலும் தனது தனது வெற்றியை பதிவு செய்ய காத்திருக்கும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்! கனா கேரள ரிலீஸ்!!!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது பட தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்த முதல் படம் கனா. இந்த படத்தை சிவாவின் நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தியும், விவசாயத்தை மையப்படுத்தியும் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் இன்று முதல் கேரளாவிலும் ரிலீஸாக உள்ளது. இதனை புரோமோட் செய்ய படக்குழு கேரளாவிற்கு சென்று வந்தது.

இந்நிலையில் இன்று முதல் இப்படம் கேரளாவில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment