காமராஜர் ஆட்சிக்காலத்தில் ரஷ்யாவுக்கு வேட்டி சட்டையுடன் தான் சென்று வந்தார்- கே.எஸ்.அழகிரி

காமராஜர் ஆட்சிக்காலத்தில் ரஷ்யாவுக்கு வேட்டி சட்டையுடன் தான் சென்று வந்தார்- கே.எஸ்.அழகிரி

காமராஜர் ஆட்சிக்காலத்தில் ரஷ்யாவுக்கு வேட்டி சட்டையுடன் தான் சென்று வந்தார் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில் , தமிழர்கள் பெருமையை உலகிற்கு மோடி எடுத்துரைக்கிறார் என்று ராதாகிருஷ்ணன் கூறுவது ஏற்புடையதல்ல ,மோடிக்கு முன்னதாக பல்லாயிரம் பேர் தமிழர் பெருமையை உலக அளவில் முன்னிறுத்தி உள்ளனர்.
தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் ரஷ்யாவுக்கு வேட்டி சட்டையுடன் தான் சென்று வந்தார்.மற்ற நாட்டு தலைவர்கள் தமிழகம் வந்தால் தான் தூய்மையாகவும், அழகாகவும் இருக்குமா என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது தமிழக அரசுக்கு வெக்க கேடான ஓன்று .
எனவும் பொதுமக்களையும் அதிகாரிகளையும் இடங்களை சுத்தமாக வைக்க பழக செய்ய வேண்டும். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரங்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது, நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம், அதிமுக வீழ்த்தப்படும் என்று தெரிவித்தார்.

Join our channel google news Youtube