நான் கூறியது சரித்திர உண்மை! திருப்பரங்குன்றத்தில் கமல் பேச்சு!

அரவக்குறிச்சியில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து கமலஹாசன் பேசிய போது, 'இந்தியாவின்

By manikandan | Published: May 15, 2019 06:16 PM

அரவக்குறிச்சியில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து கமலஹாசன் பேசிய போது, 'இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே!' எனக்கூறியது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சைக்குள்ளானது பாஜக மற்றும் அதிமுகவினர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் கமல்ஹாசன் மீது புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் இன்று பிரச்சாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் 'யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. ஆனால், சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதனை மாற்ற வேண்டும். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இருந்து எனக்கூறியது சரித்திர உண்மை. மத செருக்கு ஜாதி செருக்கு எல்லாம் இங்கு நிற்காது. நான் சொன்னது சரித்திர உண்மை. உண்மை கொஞ்சம் கசக்கும் .ஆனால் கசப்பு மருந்து ஆகும். இந்த அரசு வீழும், வீழ்த்தப்பட்ட வேண்டும் வீழ்த்துவோம் .' என தனது பரப்புரையை ஆற்றினார். DINASUVADU
Step2: Place in ads Display sections

unicc