உலகநாயகனை வியக்க வைத்த பரியேறும் பெருமாள்!

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் கதிர், கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள் திரைப்படம். இப்படம் வெளியான அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த வாரம் இப்படத்திற்க்கு அதிக அளவில் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு வரவேற்ப்பு இன்னும் அதிகமாக உள்ளது. 
இந்நிலையில் நேற்று நடிகர் விஜய் இப்படகுழுவினரை வெகுவாக பாராட்டி இருந்தார். எந்த பக்கம் திரும்பினாலும் உங்க படத்தை பற்றிய பேச்சுதான் சீக்கிரம் படத்தை பார்த்துவிட்டு சொல்கிறேன் என  விஜய் படத்தை பாராட்டினார்.
இந்நிலையில் இப்படத்தை உலகநாயகன் கமலஹாசன் பார்த்துவிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். மக்கள் மனதில் நின்ற பரியேறும் பெருமாளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்ததுக்கள் என கூறினார்.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment