போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? – கமல்ஹாசன் கேள்வி!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நாடுமுழுவதும் மருத்துவ ஊழியர்கள் ஓய்வின்றி திறம்பட செயல்பட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் கையுறை, முககவசம் போன்ற மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவிற்கு இல்லை என குற்றசாட்டு கூறப்பட்டு வருகிறது, இந்த தேவையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், மருத்துவ ஊழியர்களுக்கு தேவையான உபகரணங்கள் இல்லாமல் பணி செய்ய கோருவது, ஆயுதமின்றி போருக்கு அணுத்துவது போல என கூறி பதிவிட்டுள்ளார்.

அந்த டிவிட்டர் பதிவில், ‘ போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்த கோரிக்கை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

 

தமிழக முதல்வர் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில்,1.50 கோடி முகக்கவசங்கள், 25 லட்சம் N95 முகக்கவசங்கள் ஆகியவை ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.