உலகநாயகன் விசிறிகளாகவே மாறிப்போன ஜெயம் ரவி & கார்த்தி! என்ன செய்தார்கள் தெரியுமா?!

உலக நாயகன் கமல்ஹாசன் இம்மாதம் 7ஆம் தேதி பிறந்தநாள் விழா கொண்டாடினார். இதனை

By manikandan | Published: Nov 19, 2019 08:31 AM

உலக நாயகன் கமல்ஹாசன் இம்மாதம் 7ஆம் தேதி பிறந்தநாள் விழா கொண்டாடினார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் கமலின் 60ஆண்டுகால திரையுலக பயணத்தை பாராட்டும் வகையில் சென்னையில் பிரமாண்ட கலை விழா நடைபெற்றது. இதில் உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, கார்த்தி, ஜெயம் ரவி என பலர் கலந்து கொண்டனர். அதில் மேடையில் பேசிய நடிகர் ஜெயம் ரவி கமல் நடித்த புன்னகை மன்னன் படத்தில் வரும் தீம் பாடலுக்கு நடனம் ஆடி தனது ஆதர்ச நாயகனை சந்தோசப்படுத்தினார். அடுத்து நடிகர் கார்த்தி மேடையில்,  கமல்ஹாசன் நடித்திருந்த விக்ரம் திரைப்படத்தில்  வரும் கண்ணே தொட்டுக்கவா கட்டிக்கவா என கமல் பாடும் ராகத்தில் பாடி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
Step2: Place in ads Display sections

unicc