அப்போதும் நம்பினேன்.! இப்போதும் நம்பினேன்.! ஏமாற்றிவிட்டீர்கள்.! கமல் வெளியிட்ட புதிய அறிக்கை.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேளையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில்  நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக செயல்படுவதை குறிக்கும் வகையில் அனைவரும் ஒற்றுமையாக மின் விளக்கை அணைத்து அகல்விளக்கு (அ)  டார்ச் லைட் ஏற்றுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து, நேற்று இரவு 9 மணிக்கு பெரும்பாலானோர் தங்கள் வீட்டில் அகல்விளக்கு ஏற்றினர்.

பிரதமரின் இந்த நடவடிக்கைகள் குறித்து மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ பணமதிப்பிழப்பின் போது உங்களை நம்பினேன். அது தவறு என்பது பின்னர் நிருபணமானது. தற்போது இந்த ஊரடங்கு நடவடிக்கையிலும் உங்களை நம்பினேன், ஆனால் தற்போதும் நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள் என நிருபணமாகி உள்ளது. 

 திடீரென அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பால் பல ஏழைகளின் வாழ்வாதாரமும் சேமிப்பும் சிதைந்து போனது. அதேபோல திட்டமிடப்படாத ஊரடங்கு பலரது அன்றாட வாழ்வை அழித்து வருகிறது. நீங்கள் வீட்டில் விளக்கு ஏற்ற சொல்கிறீர்கள். ஆனால் பலர் சமைக்க கூட எண்ணெய் இல்லாமல் இருக்கின்றார்கள். நீங்கள் பால்கனி மக்களுக்கான அரசாக இருக்க மாட்டீர்கள் என மீண்டும் நம்புகிறேன். மேற்கண்ட நடவடிக்கைகளை தவிர்த்து நல்ல நடவடிக்கைகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன். 

ஒரு பிரச்சனை உருவாவதற்கு முன்னரே நீங்கள் தீர்வை யோசிக்க வேண்டும். சீனாவில் டிசம்பர் மாதம் இந்த கொரோனா பரவ தொடங்கிவிட்டது. ஜனவரி 30ஆம் தேதியில் தான் இந்தியாவில் முதல் கொரோனா தொற்று அறியப்படுகிறது. ஆனால், அதனை தவிர்த்து 4 மணிநேர இடைவெளியில் நீங்கள் அமல்படுத்திய ஊரடங்கு அமல்படுத்தி, பலரது இயல்பு வாழ்க்கையை இந்த ஊரடங்கு பாதித்துவிட்டது. 

நமது பெரும் சக்தியே மக்கள் பலம் தான். அதனை வைத்து நாம் இந்த சூழலில் இருந்து வெளியே வரவேண்டும். நாங்கள் கோபமாக இருந்தாலும் உங்கள் பக்கம் நிற்கிறோம். என அந்த அறிக்கையில் பிரதமர் மோடிக்கு தனது கருத்தை தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன். 

 

 

.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.