அரைவேக்காடு என்பதனை கமல்ஹாசனே ஒப்புக்கொண்டுள்ளார்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

அரைவேக்காடு என்பதனை கமல்ஹாசனே ஒப்புக்கொண்டுள்ளார் என்று  அமைச்சர் கடம்பூர்

By venu | Published: Sep 22, 2019 08:30 AM

அரைவேக்காடு என்பதனை கமல்ஹாசனே ஒப்புக்கொண்டுள்ளார் என்று  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் சுபஸ்ரீ மரணம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ பதிவில்,  அரசின் அலட்சியத்தால் பல ராகுக்கல்,பல சுபஸ்ரீகள் கொல்லப்பட்டிருக்காங்க..கொஞ்சமாவது அறிவு வேண்டாமா? எங்க பேனர் வைக்கணும் வைக்கக்கூடாதுனுமா தெரியாது அவங்களுக்கு..இவர்களை போன்ற அரைவேக்காட்டு அரசியல் வாதிகளால் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட்ட போகின்றது என்று ஆவேசமாக பேசினார். இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  அரசு அலட்சியத்தினால் கொலை எப்படி நடக்கும்? கமல் அரசியல்வாதிகளை குறை சொல்லவில்லை சட்டம், காவல்துறை, நீதிமன்றம் ஆகியவற்றை குறைசொல்கிறார் . தான் அரைவேக்காடு என்பதனை கமல்ஹாசனே ஒப்புக்கொண்டுள்ளார் என்று  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc