பிரதமர் பேச்சில் அதிகம் எதிர்பார்த்தேன் – கமல்ஹாசன் ட்வீட்

பிரதமர் பேச்சில் அதிகம் எதிர்பார்த்தேன் – கமல்ஹாசன் ட்வீட்

பிரதமர் பேச்சில் அதிகம் எதிர்பார்த்தேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நேற்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஒரு வீடியோ செய்தி வெளியிட்டார்.அதில் ,ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வீட்டின் விளக்கை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என தெரிவித்தார்.

வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் .வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என்று வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்தார்.இதற்கு பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார் என்று பதிவிட்டுள்ளார்.

Join our channel google news Youtube