மருத்துவர்களுக்கு நன்றி சொன்ன கமலஹாசன்!

நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் உலகநாயகனாக வலம் வருகிறார். இவர் சினிமாவில்

By leena | Published: Mar 12, 2020 10:08 AM

நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் உலகநாயகனாக வலம் வருகிறார். இவர் சினிமாவில் மட்டுமல்லாது, தற்போது அரசியலிலும்  செயல்பட்டு வருகிறார். தற்போது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உலகெங்கும் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், கமலஹாசன் தான் ட்வீட்டர் பக்கத்தில், ' மனித இனத்திற்கு எதிரான இந்த கொரோனா தாக்குதலுக்கு எதிராக இரவு, பகல், பாராமல் அயராது போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தனக்கென பாராமல் பிறர்க்காக போராடும் உங்களின் சேவையால் தான் உலகம் பயமின்றி சுவாசிக்கிறது.' என்று பதிவிட்டுள்ளார். 

 

Step2: Place in ads Display sections

unicc