புதுச்சேரியில் கமல்ஹாசன் பரப்புரை தொடங்குகிறார்

  • புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக மார்ச் 31-ம் தேதி கமல்ஹாசன் பரப்புரை ஈடுபடுகிறார்.மேலும் பரப்புரையின் போது கமல்ஹாசன் புதுச்சேரி மாநிலத்திற்கான தேர்தல் அறிக்கையும் வெளியிடுகிறார்.

அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  அதில் இரண்டாம் கட்டமாக  அடுத்த மாதம் 18 -ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது.

இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கைகளையும் , வேட்பாளர் பட்டியலையும் அறிவித்து வருகின்றனர். அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக மார்ச் 31-ம் தேதி கமல்ஹாசன் பரப்புரை ஈடுபடுகிறார்.மேலும்பரப்புரையின் போது கமல்ஹாசன் புதுச்சேரி மாநிலத்திற்கான தேர்தல் அறிக்கையும் வெளியிடுகிறார்.

author avatar
murugan

Leave a Comment