கலைமாமணி விருது வழங்கும் விழா துவக்கம்! கலைமாமணி விருது பெரும் திரையுலக பிரபலங்கள்!

இயல், இசை, நாடகம், கலைத் துறையைச் சேர்ந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கும்

By Fahad | Published: Apr 01 2020 05:33 PM

இயல், இசை, நாடகம், கலைத் துறையைச் சேர்ந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் துவங்கியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விருதினை வழங்குகிறார். இந்த விழாவுக்கு, சபாநாயகர் தனபால் தலைமை தாங்குகிறார். துணை முதல்வர் பன்னீர்செல்வம் அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த விருது நடிகர்கள் பாண்டு, ஆர்.ராஜசேகர், நடிகை குட்டிப்பத்மினி பாடகி சசிரேகா, நடன இயக்குனர் புலியூர் சரோஜா உள்ளிட்டோர் இந்த விருதினை பெறுகின்றனர். மேலும், லோனா தமிழ்வாணன், வயலின் கலைஞர் லால்குடி விஜயலக்ஷ்மி, தவில் வித்வான் பழனிவேல் ஆகியோரும் இவ்விருதினை பெறவுள்ளனர்.

More News From cinema actoress