வெப் தொடரில் களமிறங்கும் காஜல்!

  • புதிய ஆண்டில் புதுமையாக இருக்க ஆசைப்படுகிறேன்.
  • வெப் தொடரிலும் நடிக்க போகிறேன்.

நடிகை காஜல் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் -2 படத்தில் வருகிறார். இந்த படத்தில், அவர் வயதான தோற்றத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உளளது. இந்நிலையில் இவர் தனது திரையுலக அனுபவம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம், எனக்கு நல்லது நடக்குமா? என்ற இரண்டு விஷயங்களை பற்றி மட்டுமே யோசிப்பேன். புதிய ஆண்டில் புதுமையாக இருக்க ஆசைப்படுகிறேன். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்கிறேன். வெப் தொடரிலும் நடிக்க போகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சினிமாவில் இப்போதுதான் வந்த மாதிரி இருக்கிறது. கமல்ஹாசனுடன் இந்தியன்-2 படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த ஆண்டு இன்னும் எனக்கு பிரகாசமான ஆண்டாக இருக்கும் என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.