பாஜக நாங்குநேரி தொகுதியில் போட்டியா?அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

நாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு விட்டுக்கொடுப்பது பற்றி கட்சி தலைமை தான் முடிவு

By Fahad | Published: Apr 09 2020 10:53 PM

நாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு விட்டுக்கொடுப்பது பற்றி கட்சி தலைமை தான் முடிவு செய்யும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இந்த நிலையில்  கோவில்பெட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், நாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு விட்டுக்கொடுப்பது பற்றி கட்சி தலைமை தான் முடிவு செய்யும். அரசியலின் ஆழம் தெரியாமல் கமல் காலை விட்டுவிட்டார், தற்போது வெளியேற முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறார் என்று  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Related Posts