பாஜக நினைத்திருந்தால் வேறு மாநிலத்திற்கு அதனை வழங்கியிருக்கலாம்! – அமைச்சர் கடம்பூர் ராஜு அதிரடி!

பாஜக நினைத்திருந்தால் வேறு மாநிலத்திற்கு அதனை வழங்கியிருக்கலாம்! – அமைச்சர் கடம்பூர் ராஜு அதிரடி!

  • தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. 
  • இதில் கயத்தாறில் தனது வாக்கினை பதிவு செய்த பின் தமிழக விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டியளித்தார்.

தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களுக்கான இந்த இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிமுதல் தொடங்கியது. இதில் 158 ஒன்றியத்திற்கும் ஊராட்சி மன்ற  உறுப்பினர் , ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறும் வகையில் தமிழக விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியத்தில் தனது வாக்கினை காலையிலேயே பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘ தமிழக அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை மத்திய அரசு தான் அறிவித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக நினைத்திருந்தால் அவர்கள் ஆட்சிபுரியும் மாநிலங்களில்  ஏதேனும் ஒன்றை அறிவித்து விடலாம். ஆனால், நிர்வாகத்தில் சிறப்பான பங்கை ஆற்றியதனால் தான் தமிழகத்திற்கு முதல் இடம் கிடைத்தது.

சீன அதிபரும், பிரதமர் மோடியும் தமிழகத்தில்  சந்தித்து கொண்டது உலக வரலாறு. சீன அதிபர் கூட தமிழக நிர்வாகத்தை பாராட்டிதான் சென்றார். அப்போதெல்லாம் முக.ஸ்டாலின் வெளிநாடு சென்றாரா ?’ என பேட்டியில் தெரிவித்திருந்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube