கச்சத்தீவு திருவிழா தொடக்கம்… இந்தியாவிலிருந்து இலங்கை கச்சத்தீவிற்க்கு படகுகள் பயணம்…

முன்பு கச்சத்தீவு இந்தியாவுடன் இருந்த போது அங்கு இருந்த கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவிலில் ஆண்டுதோறும் தமிழக மக்கள் திருவிழா நடத்துவது வழக்கமாக இருந்தது. ஆனால் கச்சத்தீவு இந்திய அரசால் இலங்கைக்கு  அளிக்கப்பட்ட உடன் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாக மாறியது. எனவே இந்த கோவில்  ஆலய திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து இந்திய மற்றும் இலங்கை அரசின் அனுமதி பெற்று அன்றிலிருந்து இன்று வரை தரிசனம் செய்து வருகின்றனர்.

Image result for கச்சத்தீவு திருவிழா படகுகள் பயணம்

இந்நிலையில் இந்தாண்டு ராமேஸ்வரத்தில் இருந்து முதல் படகு கச்சத்தீவு புறப்பட்டது. கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழா இன்று  தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. அங்கு இன்று மாலை சரியாக 6 மணிக்கு கச்சத்தீவு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி திருச்சிலுவை ஆராதனை, சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடக்கிறது. இதை தொடர்ந்து சிறப்பு  திருப்பலி, அந்தோணிய்யார் தேர் பவனி ஆகியவை நடைபெறும். நாளை,  காலை வழிபாடு, திருவிழா திருப்பலியுடன் கச்சத்தீவு புனித அந்தோணியார்  விழா நிறைவு பெறுகிறது.

author avatar
Kaliraj