புதுச்சேரி தொகுதியில் கே.நாராயணசாமி வேட்பாளராக அறிவிப்பு

  • புதுச்சேரி மக்களவைத் தொகுதி தி.மு.க கூட்டணியில் காங்கிரசுக்கும் , அ.தி.மு.க கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக கே.நாராயணசாமி போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கவுள்ளது .அதில் தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக  அடுத்த மாதம் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளது .

இந்நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில்  போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்து வருகின்றனர். மேலும் பிரச்சாரத்தில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதி தி.மு.க கூட்டணியில் காங்கிரசுக்கும் , அ.தி.மு.க கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக கே.நாராயணசாமி போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி அறிவித்துள்ளார்.

author avatar
murugan

Leave a Comment