ரசிகர்களை ஏமாற்றிய 'ராக்கி பாய்' கே.ஜி.எஃப்-2 படக்குழு!

ரசிகர்களை ஏமாற்றிய 'ராக்கி பாய்' கே.ஜி.எஃப்-2 படக்குழு!

  • Yash |
  • Edited by Mani |
  • 2020-01-07 10:16:19
  • கன்னட சினிமாவில் பிரம்மாண்டமாக உருவாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் கே.ஜி.எஃப்.
  • இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.
கன்னட சினிமா உலகில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என மற்ற பிராந்திய மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்த திரைப்படம் கே.ஜி.எஃப். இப்படத்தில் கதாநாயகனாக யாஷ் நடித்திருந்தார். பிரசாந்த் நீல் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த பாகத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி இருந்த நிலையில், நாளை ஜனவரி 8 அன்று கேஜிஎப் நாயகன் யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு டீசர் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இயக்குனர் பிரசாந்த் நீல் ஜனவரி 6ஆம் தேதி தான் படத்தின் சூட்டிங் முடிந்தது, அதனால் இரண்டு நாளில் கே.ஜி.எஃப் இரண்டாம் பாக டீசர் ரெடி செய்வது கஷ்டம். அதனால், நாளை யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டர் மட்டுமே வெளியாகும் என இயக்குனர் தெரிவித்துள்ளாராம். டீசர் அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்கள் தற்போது ஏமாற்றமடைந்துள்ளனர்.

Latest Posts

ஆந்திராவில் 132 செயலிகளுக்கு தடை..ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள்.!
பயணிகளின் வசதிக்காக நவ.,2-ம் தேதி சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!
மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம் - முதலமைச்சர் பழனிசாமி
இந்திரா காந்தியின் 36-வது நினைவு தினம்.. பிரதமர் மோடி அஞ்சலி.!
இந்தியா ஒற்றுமையின் கோணத்தை எட்டி வருகிறது - பிரதமர் மோடி
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு..!
#MIvsDC: பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா டெல்லி...?
அமேசானில் ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்தவருக்கு வந்தடைந்த ரின் சோப்!
விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்த சகாயம் ஐஏஎஸ் ?
மாற்றமின்றி விற்பனையாகும் முட்டை விலை...!