பொலிவான சருமத்தை பெற இதுமட்டும் செய்து பாருங்க, உங்க முகம் பளிச்சினு ஆகிரும்

சருமத்தை பராமரிக்க எப்போதும் இயற்கையான வழிமுறைகளை கைக்கொள்வது தான்

By leena | Published: Mar 29, 2019 02:43 PM

  • சருமத்தை பராமரிக்க எப்போதும் இயற்கையான வழிமுறைகளை கைக்கொள்வது தான் சிறந்தது.
இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சருமத்தை அழகாக்க ஏதேதோ முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். ஆனால், அந்த முயற்சிகளால் சில பக்கவிளைவுகளை தாங்களே வரவழைத்து கொள்கின்றனர். Image result for பொலிவான சருமத்தை சருமத்தை பராமரிக்க எப்போதும் இயற்கையான வழிமுறைகளை கைக்கொள்வது தான் சிறந்தது. தற்போது சருமத்தை பொலிவாக்குவதற்கான சில வழிமுறைகளை பற்றி பாப்போம்.

தேவையானவை

  • தண்ணீர் - 2 கிளாஸ்
  • எசன்ஷியல் ஆயில் - 4 சொட்டு
  • கிரீன் டீ சாறு-அரைடீஸ்பூன்
  • பனிக்கட்டி டிரே

 தயாரிப்பு

2 கிளாஸ் தண்ணீரை 5 நிமிடம் கொதிக்க வைத்து, ஆற வைக்கவும். நன்றாக ஆறியவுடன் அதை தூய்மையான ஜாடியில் ஊற்ற வேண்டும். பின்னர் உங்களுக்கு விருப்பமான எசன்ஷியல் ஆயில் சில சொட்டுகளை அதில் சேர்க்க வேண்டும். Related image இதில் சிட்டிகை கிரீன் டீ சாற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் இந்த கலவையை பிரிட்ஜ் டிரேவில் ஊற்றி, பனிக்கட்டிகளாக மாற்ற வேண்டும்.

செய்முறை 

ரசாயனம் இல்லாத பேஸ் வாஷ் கொண்டு உங்கள் முகத்தை கழிவி நன்றாக உலர வைக்க வேண்டும். பனிக்கட்டியை துணியில் வைத்து, அதில் ஒரு பக்கம் மட்டும் மூடப்படாமல் இருப்பது போல அமைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் கன்னத்தின் மீது, முன்நெற்றியில், கண்களுக்கு கீழே பனிக்கட்டியால் வட்ட வடிவில் தடவ வேண்டும். Related image   இவ்வாறு 20 முதல் 25 நிமிடங்கள் செய்ய வேண்டும். 5 அல்லது 7 நிமிடங்களுக்கு ஒரு முறை பனிக்கட்டியை மாற்ற வேண்டும். பின்னர் பருத்தி டவலால் முகத்தை துடைத்து மாய்ஸ்சரைஸ் செய்து கொள்ள வேண்டும்.
Step2: Place in ads Display sections

unicc