இந்த உணவை மட்டும் சாப்பிட்டு பாருங்க! உங்களை எந்த நோயும் அணுகாது!

நமது உடல் ஆரோக்கியத்தை பாக்குவப்படுத்தும் பழைய சாதம்.  இன்றைய நாகரீகம்

By leena | Published: May 25, 2020 12:25 PM

நமது உடல் ஆரோக்கியத்தை பாக்குவப்படுத்தும் பழைய சாதம். 

இன்றைய நாகரீகம் நிறைந்த சமூகத்தில், நம்முடைய தலைமுறையினர் 50 வயதிற்கு மேல், எந்த மருந்து, மாத்திரையின் உதவியும் இன்றி ஆரோக்கியமாக வாழ்வது என்பது மிகவும் கடினமாக தான் உள்ளது. ஆனால், நம்முடைய முன்னோர்களில் பலர், 100 ஆண்டுகளை கடந்து, மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை தான். 

நம் முன்னோர்களின் இந்த நீண்ட கால ஆயுசிற்கு காரணம் என்னவென்று பார்த்தால், அவர்களது உணவு முறைகள் தான் இதற்க்கு முக்கியமான காரணமாக இருக்கும். இவர்களது உணவுகளில் பழைய சாதம் என்பது ஒரு முக்கியமான பங்கினை வகிக்கிறது. 

பழைய சாததை பொறுத்தவரையில், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய, அனைத்து சத்துக்களும் உள்ளது. இந்த பழைய சாதத்தில் உள்ள, புரோபயாடிக்குகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் போது, நமது உடலில் எந்த நோயும் ஏற்படாது. 

இந்த புரோபாயடிக்குகள் என்பது நேரடி நுண்ணுயிரிகளாகும். இந்த நுண்ணுயிரிகள் புளித்த உணவுகளில் தான் கிடைக்கிறது. அதிலும், பழைய சாதத்தில் தான் இந்த நுண்ணுயிரிகள் அதிகமாக கிடைக்கிறது. 

இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், குடல் இயக்கமும் சீராக இருக்க உதவுகிறது. மேலும், நமது உடலை  வலுவாகவும்,ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதில் பழைய சாதம் முக்கிய பங்கினை வகிக்கிறது.

Step2: Place in ads Display sections

unicc