ஜூன் முதல் வாரம்! புதிய அமைச்சரவை! நாடாளுமன்ற முதல் கூட்ட தொடர்!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக நீடிக்க உள்ளார்.

புதிய அமைச்சர்களின் பதவியேற்பு வருகிற மே 30ஆம் தேதி நடக்க உள்ளது. அதனை தொடர்ந்து நாடாளுமன்றம் கூட்டத்தொடர் துவங்க உள்ளது.அதன் படி, வருகிற ஜூன் மாதம் ஆறாம் தேதி 17 ஆவது நாடாளுமன்றம் முதல் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என தெரிகிறது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment