இந்தாண்டு முதல் ஜூலை 30ஆம் தேதி மருத்துவமனை தினம்! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

1882ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி, புதுக்கோட்டை சமஸ்தானத்தில் பிறந்தவர் டாகடர் முத்துலட்சுமி ரெட்டி. இவர் 1912ஆம் ஆண்டு மருத்துவராக தனது பட்ட படிப்பை முடித்து, இந்தியாவின் முதல் பெண் டாக்டர் என்ற பெற்றுமையை  பெற்றது.

இவருக்கு மத்திய அரசு 1956 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தது. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி அவர்கள் 1968ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி இயற்கை எய்தினார்.

இந்தாண்டு முதல் அவர்களின் பிறந்தநாளான ஜூலை 30ஆம் தேதி  அனைத்து மருத்துவமனை தினமாக கொண்டாடப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.