தனியார் பள்ளிகளை தவிர்த்து..! அரசு பள்ளியில் தன் குழந்தைகளை சேர்த்த நீதியரசர்..!

அரசு பள்ளியில் நீதிபதி ஒருவர் தனது குழந்தைகளை சேர்த்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளார்.
நாமக்கல் மாவட்டம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக வடிவேல் உள்ளார்.இவர் தனது குழந்தைகளை நாமக்கல் நல்லபாளைத்தில் உள்ள அரசு பள்ளியில் தனது குழந்தைகளான நிஷாந்த் சக்தி மற்றும் ரீமா சக்தி இருவரையும்   பள்ளியில் சேர்க்கை அளிக்குமாறு தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பம் கொடுத்தார்.
இந்நிலையில் விண்ணப்பத்தினை பெற்று கொண்ட தலைமை ஆசிரியர் நீதியரசரின்  குழந்தைகளான  நிஷாந்த் சக்தி 6 வகுப்பிலும் மற்றும் ரீமா சக்தி 8 எட்டாம் வகுப்பிலும் அரசு பள்ளியில் சேர்த்து கொண்டனர்.
இதற்கு முன்பும் நீதிபதி வடிவேல் திருச்சியில் துறையூரில் பணியாற்றினார் அங்கும்  தன் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு பள்ளியை அவலமாக கருதி கல்வி தகுதி குறித்து அச்சம் கொண்டு தனியார் பள்ளி மோகத்தில் இருக்கும் பெற்றோருக்கு நீதிபதி ஒரு முன்னுதாரணம் ஆக திகழ்கிறார்.

author avatar
kavitha