மது விற்பனையை எதிர்த்து கைது செய்யபட்ட இளைஞரை சொந்த ஜாமீனில் விடுதலை செய்த நீதிபதி!

மது விற்பனையை எதிர்த்து கைது செய்யபட்ட இளைஞரை சொந்த ஜாமீனில் விடுதலை செய்த நீதிபதி!

திருவாரூர் அருகே தேவர்கண்டநல்லூர் சட்ட விரோதமாக மது விற்பதாக கூறி இளைஞர்கள் மற்றும்  பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது போராட்டத்தில் “இது தமிழ்நாடா  இல்லை குடிகாரநாடா” என்ற விளம்பர பதாகை வைத்து போராடினர்.

இந்த போராட்டத்தில் விளம்பர பதாகை வைத்துர  இருந்த செல்லபாண்டியன் என்ற இளைஞரை கோரடாச்சேரி காவல் துறை கைது மூன்று பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். கைது செய்து இளைஞரை காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது நீதிபதி  சட்ட விரோதமாக மது விற்பதற்கு எதிர்த்து போராடுவது தவற என காவல்துறையிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.மேலும் செல்லபாண்டியனை கைது செய்ததை கண்டனம்  தெரிவித்து செல்லபாண்டியை சொந்த ஜாமீனில் விடுதலை செய்தார்.

author avatar
murugan
Join our channel google news Youtube