ஜெயம் ரவியின் 'ஜன-கன-மன' பட புதிய அப்டேட்! ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளாரா?!

கோமாளி படத்தினை தொடர்ந்து ஜெயம்ரவி அடுத்ததாக இயக்குனர் லட்சுமணன் இயக்கத்தில்

By manikandan | Published: Sep 04, 2019 09:15 AM

கோமாளி படத்தினை தொடர்ந்து ஜெயம்ரவி அடுத்ததாக இயக்குனர் லட்சுமணன் இயக்கத்தில் தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். இதற்க்கு அடுத்ததாக தனது 26வது படத்தினில் அஹமது இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அஹமது இயக்கத்தில் நடித்துவரும் திரைப்படத்திற்கு ஜன-கன-மன என தலைப்பிடப்பட்டுள்ளதாம். இப்படம் இந்தியில் வெளியான பேபி எனும் திரைப்படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இப்படத்தில் ஜெயம் ரவியுடன் அர்ஜுனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். இப்படத்திற்கும் முதலில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹுமானிடம் இசையமைக்க கேட்டுள்ளார். அது சில காரணங்களால் நடக்காமல் போனது. தற்போது இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கமிட்டாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நாயகியாக டாப்ஸி மற்றும் செக்க சிவந்த வானம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்த டயானா எரப்பா ஆகியோர் நடித்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இப்படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc