ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படம் பாலிவுட் படத்தின் ரீமேக்கா?!

கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி, போகன் பட இயக்குனர்

By manikandan | Published: Aug 28, 2019 08:15 AM

கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி, போகன் பட இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில் தனது 25-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு மனிதன்,  என்றென்றும் புன்னகை ஆகிய படங்களை இயக்கிய அகமது இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவி ராணுவ வீரராக நடிக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. தற்போது கூடுதல் தகவலாக இப்படத்தில் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம்.  கதாநாயகியாக டாப்சி நடிக்க உள்ளார்.  இப்படமானது பாலிவுட்டில் வெற்றி பெற்ற பேபி படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது அந்த படத்தில் அக்ஷய்குமார், ராணா, டாப்ஸி ஆகியோர் நடித்திருந்தனர். அப்படம்  முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc