போட்டியின்றி பாஜக தலைவராக ஜே.பி. நட்டா தேர்வு.!

  • இன்று காலை 10 மணி முதல் 12.30 மணி வரை பாஜக தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.
  • வேட்புமனு தாக்கல் முடிந்தவுடன் ஜே.பி நட்டா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது கட்சித் தலைவராக பதவி வகித்த ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சர் ஆனார். இதைத்தொடர்ந்து 2014 -ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி பாஜகவிற்கு அமித்ஷா தலைவரானார்.

பின்னர் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தபோது 2014-ம் ஆண்டை விட கூடுதல் இடங்களை பிடித்து மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்தது.கட்சிக்கு வெற்றியை தேடித்தந்த நிலையில் அமித்ஷா உள்துறை அமைச்சரானார்.

ஆனாலும் கட்சிப்பதவியில் தொடர்ந்தார், அமித்ஷாவிற்கு உதவியாக செயல்தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. அதனால் அந்த பதவிக்கு மோடியின் முந்தைய அரசின் சுகாதார துறை மந்திரி இருந்த ஜே.பி நட்டா தேர்வு செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 17-ம் தேதி ஜே.பி நட்டா செயல் தலைவர் தலைவராகப் பொறுப்பேற்றார் .இந்நிலையில் பாஜக தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை கட்சியின் அமைப்பு தேர்தல் பொறுப்பாளர் ராதாமோகன் சிங் தெரிவித்தார்.

அதன்படி இன்று காலை 10 மணி முதல் 12.30 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இது தொடர்ந்து பாஜகவில் புதிய தலைவராக ஜே.பி நட்டாவின் பெயரை மோடி , மத்திய அமைச்சர்கள் , பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் , துணை முதலமைச்சர்கள் முன் மொழிந்தனர். இதனால் வேட்புமனு தாக்கல் முடிந்தவுடன் ஜே.பி நட்டா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

author avatar
murugan