கன்னியாகுமரியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த வேண்டும்!பாஜக தொடர்ந்து நெருக்கடி!தினகரன் தகவல்

கன்னியாகுமரியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த வேண்டும்!பாஜக தொடர்ந்து நெருக்கடி!தினகரன் தகவல்

கன்னியாகுமரியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்துமாறு தொடர்ந்து பாஜக-வினர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர் என்று தினகரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலும்,இடைத்தேர்தலும்    நடைபெற உள்ளது.காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றது. மக்களவை தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40-மக்களவை தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை இரண்டுகட்டமாக தினகரன்  வெளியிட்டார்.

அதேபோல் பலகட்ட போராட்டத்திற்கு பின்னர்  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் அமமுக சார்பில் லட்சுமணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.தினகரன்  தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கன்னியாகுமரியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்துமாறு தொடர்ந்து பாஜக-வினர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர் என்று கூறியுள்ளார்.

Related image

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றார்.அப்போது அவர் பேசுகையில்,கன்னியாகுமரி மற்றும் நெல்லை தொகுதிகளில்  சிறுபான்மையினரை நிறுத்த பாஜக நெருக்கடி கொடுத்து வந்தது.தற்போதைய கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மூலமாக  எனக்கு தூது அனுப்பினார்.ஆனால் இதுவரை நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை. இது மட்டும் அல்லாமல் எனக்கு பல்வேறு நெருக்கடி பாஜக தரப்பில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தினகரன்  இவ்வாறு கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *