பாப் இசையின் மன்னர் மைக்கல் ஜாக்சன் தந்தை மரணம்!

மைக்கல் ஜாக்சன்  பாப் இசையின் மன்னர் என அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில்

By Fahad | Published: Mar 29 2020 03:04 AM

மைக்கல் ஜாக்சன்  பாப் இசையின் மன்னர் என அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில் அமெரிக்க பாப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர், மற்றும் வள்ளல் எனப் பல முகங்கள் கொண்டவர். இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜீன் 25-ம் தேதி உயிரிழந்தார்.
Image result for michael jackson father died
லாஸ் வேகாஸ் நகரில் அவரது தந்தை ஜோசப் ஜாக்சன் (89)  தனிமையில் வசித்து வந்தார். இவரே ஜாக்சன் 5 பிரதர்ஸ் என்ற இசைக்குழுவை உருவாக்கி மைக்கெல் ஜாக்சனை இசை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அவர் கடந்த பல ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,நேற்று மாலை அவர்  உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இந்த தகவலை ஜாக்சன் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் உறுதிசெய்துள்ளார்.

More News From Father Of Late Michael Jackson Has Died