குட் நியூஸ்!!ஐபிஎல் ரசிகர்களுக்கு அடித்த புதிய ஜாக்பாட் !!

 

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் ஐபில் போட்டி தொடங்கி, ஐபில் கோப்பைக்கான இறுதிப்போட்டி நடக்கும் நாள் வரையிலாக அனைத்து மைதானங்களிலும் ஏர்டெல் நிறுவனத்தின் மேசிவ் மிமோ ப்ரீ-5ஜி தொழில்நுட்ப (Massive MIMO Pre-5G technology) சோதனை நடக்கவுள்ளது.

டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, மொஹலலி, இந்தூர், ஜெய்ப்பூர், பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில், இன்றுமுதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் நிறுவனத்தின், தலைமை தொழில்நுட்ப அதிகாரியான (மொபைல், பார்தி ஏர்டெல்) ஷியாம் மர்டிக்காரின்படி, “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிவேக 4ஜி அனுபவத்தை வழங்கும் எமது முயற்சியின் ஒரு பகுதியாக, ஐபிஎல் போட்டிகள் நடக்கும் மைதானங்களில், அதிக வேகமான மற்றும் அதிக திறன் கொண்ட இன்-ஸ்டேடியா நெட்வொர்க் (in-stadia network) அனுபவத்தை கொடுக்கும் மேம்பட்ட ப்ரீ-5ஜிதொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்தவுள்ளோம்”.

“ஏர்டெல் நிறுவனம் அதன் பாரிய மிமோ செயல்பாட்டை பரிசோதிக்கப்போகும் முதல் இடம், மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியம் ஆகும்..” என்று, ஏர்டெல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் நிறுவனத்தின் படி, மேசிவ் மிமோ (மல்டிபிள் இன்புட் அண்ட் மல்டிபிள் அவுட்புட்) தொழில்நுட்பம் ஆனது, ஒரே அளவிலான ஸ்பெக்ட்ரமின் நெட்வெர்க் கெப்பாசிட்டியை, 5 முதல் 7 மடங்கு அதிகமான விரிவுபடுத்துகிறது. இது ஐபில் போட்டி நாடாகும் மைதானத்தை சுற்றியுள்ள மிகப்பெரிய எண்ணிக்கையிலான பயனர்களை அடையும் திறன் கொண்டுருக்கும்”. போஸ்ட் மற்றும் ஸ்ட்ரீமிங்.! மேலும் “இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கான டிஜிட்டல் அனுபவத்தை அதிகரிக்கும் என்றும், நெரிசலான இடங்களில் கூட சிரமம் இல்லாத இணைய பகிர்வை (போஸ்ட் மற்றும் ஸ்ட்ரீமிங்) நிகழ்த்த முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம்” என்றும் ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment