ரூ.80,000 சம்பளத்துக்கு விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பு.! மத்திய அரசு அறிவிப்பு..!

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள தலைமை காவலர் பணியிடங்களை

By Fahad | Published: Apr 02 2020 08:10 AM

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள தலைமை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியான 300 பணியிடங்களை நிரப்படவுள்ளது. இப்பணியிடங்கள் விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும்  கீழ்காணும் முறையில் விண்ணப்பிக்கலாம். விளையாட்டுத்துறை : தடகளம், குத்துசண்டை, கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக், ஹண்ட் பால், கால்பந்து, ஹாக்கி, கபடி, ஜூடோ, நீச்சல், துப்பாக்கி சுடுதல், வாலிபால், பளுதூக்குதல், மல்யுத்தம், டேக்வாண்டோ ஆகிய 15 பிரிவுகளை சேர்ந்த வீரர்களுக்கு காலியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி : 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கல்வி நிறுவனங்களின் சார்பில் மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் விளையாடிருக்க வேண்டும். வயது வரம்பு 1-08-2019 தேதியின்படி 18 முதல் 23 வயதிற்கு உட்பட்டிருக்க வேண்டும். 02-08-1996 முதல் 01--08-2001-ஆம் தேதிக்குள் பிறந்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் : மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையிலும், மேலும் கூடுதல் படிகள் வழங்கப்படும். உடற்தகுதி : ஆண்கள் குறைந்தபட்சம் 167 செ.மீ உயரமும், பெண்கள் 153 செ.மீ உயரமும் பெற்றிருக்க வேண்டும். தேர்வு முறை : சம்சம்பந்தப்பட்ட விளையாட்டு பிரிவில் திறமை, எழுத்து தேர்வு, மருத்துவ தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார். விண்ணப்பிக்கும் முறை : http://www.davp.nic.in - என்னும் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். ( விளையாட்டு பிரிவு வாரியாக அனுப்ப வேண்டிய முகவரி மாறுபடுகிறது). விண்ணபக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி ரூ.100. பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. விண்ணப்பதாரர்களுக்கு கடைசி தேதி 17-12-2019 ஆகும்.

More News From cenral goverment