கூடங்குளம் அணுக்கழிவுகள் எங்கே என்ன செய்யப்படுகிறது?! மத்திய அமைச்சர் மக்களவையில் விளக்கம்!

நாடாளுமன்ற கூட்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது, இந்த கூட்டத்தொடரில் திமுக எம்.பி ஞானதிரவியம், கூடன்குளம் அணுக்கழிவுகள் எங்கே கொட்டப்படுகின்றன. அதனை என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பினர். ஏனென்றால் அதனால் மக்கள் உடல் நலனுக்கு பாதிப்புகள் ஏற்படுமா என்ற வகையில் கேள்வி கேட்டிருந்தார்.
அதற்க்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளிக்கையில், ‘ கூடங்குளம் அணுஉலையில் சேகரிக்கப்படும் அணுக்கழிவுகள் பத்திரமான இடத்தில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அது எந்த இடம் என சில பாதுகாப்பு கரங்களுக்காக கூற முடியாது.
சேகரிக்கப்படும் அணுக்கழிவுகள் தரைமட்டத்தில் இருந்து 15 மீட்டர் ஆழத்தில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த அணுக்கழிவுகளை ரஷ்ய தொழில்நுட்பம் பயன்படுத்தி மீண்டும் உபயோகிக்க ஆலோசித்து வருகிறார்கள் எனவும் பதிலளித்தார்.
மேலும், வேறு அணு உலை இடத்தில் இருந்து அணுக்கழிவுகள் கொண்டு வந்து கூடங்குளத்தில் கொடுத்தப்படுகிறதா என கேட்கப்பட்டது. ஆனால், அப்படி வெளியிடங்களில் இருந்து அணுக்கழிவுகளை கூடன்குளத்திற்க்கு கொண்டு செல்லப்படவில்லை எனவும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.