ரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்காக “என் தோழி”.!

எக்ஸ்பிரஸ் ரயில்களில் பெண்கள் தனியாக செல்கையில் ஆபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள ரயில்வே மண்டலங்களில் ‘என் தோழி’ என்ற அமைப்பை தொடங்கியுள்ளது.

இந்த அமைப்பின் மூலம், 5 பெண்களை கொண்ட பாதுகாப்பு படை குழுக்களை ரயில் புறப்படும் நிலையங்களில் அமைத்து ரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்கள் ரயிலில் ஏறுவதிலிருந்து அவர்கள் வீட்டை சென்றடையும் வரையிலும் எந்த வித ஆபத்தும் ஏற்படாமல் கண்காணித்து பாதுகாக்கிறது.

அதன் முதற்கட்டமாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் ரயில்வே பாதுகாப்பு படை கமிஷனரால் “என் தோழி”என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.