15,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஜியோ நிறுவனமே கதறல்! அதிர்ச்சி தகவல்...

அட்டகாசமான சலுகைகளை வாரி வழங்குவதில் தற்போது ஜியோ தான் முதல் இடத்தில் உள்ளது.

By Hari | Published: Mar 03, 2019 03:06 PM

அட்டகாசமான சலுகைகளை வாரி வழங்குவதில் தற்போது ஜியோ தான் முதல் இடத்தில் உள்ளது. இதனால் மற்ற நிறுவனங்கள் திவால் ஆகும் நிலைக்கே தள்ளப்பட்டு விட்டது. சமீப காலமாக மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களை காட்டிலும் ஜியோ அதிரடியான சலுகைகளை வழங்கி வருகிறது. இது வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் இருப்பதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜியோ-வின் வாடிகையாளர்கள் கூறுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 15000 கோடி ரூபாய் சென்ற நிதி ஆண்டில் நஷ்டம் அடைந்துள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. சலுகைகள் இதுவரை ஜியோ வழங்கிய சலுகைகளால் ஏர்டெல், வோடபோன் போன்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே நஷ்டத்தில் தான் போய் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சென்ற நிதி ஆண்டில் முதலீட்டு தொகையில் 3.1 சதவீதம் ஜியோவிற்கு லாபம் கிடைத்துள்ளது. ஆனால், இந்த லாபத்தில் 15000 கோடி ரூபாய் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மற்ற நிறுவனங்கள் முற்றிலும் சரிவை கண்டுள்ள ஏர்டெல் நிறுவனம் ரூபாய் 630 வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதே போன்று தான் மற்ற தொலை தொடர்பு நிறுவங்களும் மிக பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக வெளியிட்டுள்ளன.
Step2: Place in ads Display sections

unicc