‘மாஸ்டர்’ விஜய் லுக்கில் வெளியான ஹீரோயின் மாளவிகா மோகனின் அசத்தல் புகைப்படம்!

  • மாஸ்டர் படத்தின் நாயகி மாளவிகா மோகன், அந்த பாஸ்ட் லுக் போன்று ப்ளர்

By Fahad | Published: Apr 01 2020 05:00 AM

  • மாஸ்டர் படத்தின் நாயகி மாளவிகா மோகன், அந்த பாஸ்ட் லுக் போன்று ப்ளர் லுக்கில் போட்டோஷூட் ஒன்று நடத்தியுள்ளார்.
  • மாளவிகா மோகன் ஜிகு, ஜிகுவென ஜொலிக்கும் வெள்ளி நிற உடையில் கவர்ச்சியாக கொடுத்துள்ள புகைப்படம் மாஸ்டர் படத்தின் பஸ்ட் லுக் போன்றே இருப்பதால் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கார்த்திக் சுப்ராஜின் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்டை படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகன். இவர் மலையாளம் திரையுலகில் முதல் படம் நடித்த பிறகு தமிழ் சினிமாவில் பேட்டை படம் மூலம் அறிமுகமானார். பின்னர் ஹிந்தி, கன்னட என பல மொழிகளில் நடித்து வருகிறார். அவ்வப்போது மாடல் போட்டியிலும் கலந்து வருகிறார். தற்போது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் பார்வை புத்தாண்டு முன்னிட்டு வெளியிடப்பட்டது, அது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பல சாதனைகளை படைத்தது.
 
View this post on Instagram
 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

அதைத்தொடர்ந்து இரண்டாவது பார்வை பொங்கலை முன்னிட்டு வெளியானது. மாஸ்டர் படத்தின் முதல் பார்வை இதுவரை விஜய் நடித்த படங்களில் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் வடிவைமைக்கப்பட்டிருந்தது. அந்த போஸ்டரில் நடிகர் விஜய் சிம்பலாக டேபுளில் காப்பை சுற்றிவிட்டு ஆள்காட்டி விரலை கீழே காட்டியும், மற்றோரு கையை தலையில் வைத்தும், கரும் தாடியுடன் இளமையாகவும், ஆக்ரோசமாகவும் எதிரில் உள்ளவரை பார்ப்பதுபோல் அமைந்திருந்தது. மேலும் அந்த போஸ்டர் முழுவதும் ப்ளராக ஏதோ போதையில் இருப்பது போன்று இருந்தது. இது அனைவராலும் மிகவும் கவரப்பட்டு உலகளவில் ட்ரண்டில் மட்டுமில்லாமல் அதிக ரீட்வீட் செய்ததில் சாதனை படைத்தது. இந்நிலையில், அந்த படத்தின் நாயகி மாளவிகா அதே மாதிரி ப்ளர் லுக்கில் போட்டோஷூட் ஒன்று நடத்தியுள்ளார். சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் மாளவிகா மோகன், அவ்வப்போது அவரது கவர்ச்சியான புகைபடங்களை பதிவிட்டு வருகிறார். அது என்னவென்று தெரியலை தளபதி கூட நடிக்கும் நடிகைகளுக்கு லைக்சும், ஷேரூம் அதிகமாகும் அதுபோன்று இவர் பதிவிட்ட மாஸ்டர் லுக் போட்டோவை அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். ரசிகர்கள் லைக்கும், ஷேரும் குவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த போஸ்டரை வைரலாகி விட்டனர். அந்த போஸ்டரில் மாளவிகா மோகன் ஜிகு, ஜிகுவென ஜொலிக்கும் வெள்ளி நிற உடையில் கவர்ச்சியாக கொடுத்துள்ள புகைப்படம் அனைத்து இளைஞரையும் கவர்ந்து லைக்ஸ் குவிக்கிறது. பார்ப்பதற்கு அப்படியே மாஸ்டர் படத்தின் பஸ்ட் லுக் போன்றே இருக்கும், அந்த போட்டோஷூட் சோசியல் மீடியாவில் வேகமாக வைரலாகி வருகிறது.

More News From same getup