ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு விழா : ராஞ்சி புறப்பட்டார் ஸ்டாலின்

ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு விழா : ராஞ்சி புறப்பட்டார் ஸ்டாலின்

  • ஜார்கண்ட் மாநிலத்தின் முதமைச்சராக  ஹேமந்த் சோரன் இன்று பதவி ஏற்க உள்ளார்.
  • ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் ராஞ்சி புறப்பட்டார்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன்  ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11- வது முதலமைச்சராக இன்று பதவியேற்க உள்ளார். ராஞ்சியில் நடைபெறும் விழாவில் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில ஆளுநர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழாவில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ,காங்கிரஸ் எம்.பி. ராகுல், பிரியங்கா,மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார்,திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களும் இதில் பங்கேற்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜார்க்கண்ட்  முதலமைச்சர்  பதவியேற்பு விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் ராஞ்சி புறப்பட்டார்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் .திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோரும் ஸ்டாலினுடன் பங்கேற்க உள்ளனர்.

Join our channel google news Youtube