ஜார்கண்ட் மாநிலத்தின் 11வது முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்!

  • ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து, 47 தொகுதிகளில் ஜே.எம்.எம்

By Fahad | Published: Apr 02 2020 05:43 PM

  • ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து, 47 தொகுதிகளில் ஜே.எம்.எம் - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
  • அம்மாநிலத்தின் 11வது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றார்.
ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் மாதம் 30-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை 5 கட்டமாக நடைபெற்றது. இதில் 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது. காங்கிரஸ் - ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடன் இணைந்து களம் கண்டது. இந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றிபெற்றது. தனித்து போட்டியிட்ட பாஜக 25 இடங்களை மட்டுமே கைப்பற்றி இருந்தது. அதனால், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த ஹேமந்த் சோரன் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜார்கண்ட் மாநிலத்தின் 11வது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு இன்று ஆளுநர் திரௌபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் , திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்திரனாக கலந்துகொண்டனர்.

More News From Hemant Soren