எதிரும் புதிருமாக ஜீவா - அருள்நிதி நடிக்கும் களத்துல சந்திப்போம் பற்றிய சூப்பர் தகவல்கள்!

தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வருகிறார் நடிகர் ஜீவா, அதே போல

By Fahad | Published: Apr 02 2020 03:15 PM

தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வருகிறார் நடிகர் ஜீவா, அதே போல வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்தலும் பெரிய வெற்றிக்காக காத்துக்கொண்டிருக்கிறார் நடிகர் அருள்நிதி. இவர்கள் இருவரும் தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இப்படத்தை பல வெற்றி படங்களை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு களத்துல சந்திப்போம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். ஜீவாவிற்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும், அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கரும் நடிக்கின்றனராம். இப்படத்தில் அருள்நிதியும் ஜீவாவும் நெருங்கிய நண்பர்களாம். இவர்களுடைய விருப்பங்களும் எதிரும் புதிருமாக இருக்குமாம். இருவரும் எதிரெதிர் கபடி டீமில் விளையாடுபவர்களாக நடிக்க உள்ளனராம். எதிரும் புதிருமாக இருக்கும் இவர்கள் எப்படி நண்பர்களாக இருக்கிறார்கள் என படம் சுவரசயமாக இருக்குமாம்.

More News From priya bhavaisankar.