ஆசிரியர்களுக்கு சம்பவம் வழங்க மல்லிகை தோட்டம் அமைத்த பள்ளி நிர்வாகம்!

ஆசிரியர்களுக்கு சம்பளம்  வழங்க வேண்டும் என்பதற்காக கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்று பள்ளியை சுற்றி மல்லிக்கை தோட்டத்தை அமைத்துள்ளது. பண்ட்வால் மாவட்டம் ஒஜாலா கிராமத்தில் உள்ள இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 6 ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு, 80 மாணவர்கள் வரை படித்து வருகின்றனர்.

அரசு சார்பில் இங்கு 2 ஆசிரியர்கள் மட்டும் இருக்கும் நிலையில், மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் மேலும் 2 ஆசிரியர்களை நியமித்தது. அவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக  பள்ளியில் 25 மல்லிகை செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்த செடியில் போக்கும் மல்லிகை பூக்களை சந்தையில் விற்று அதன் மூலம் அந்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.

அதே போல், 35 தென்னை மரங்களும் மற்றும் சில பழ வகைகளும் உள்ளன. அதில் விளையும் கபழங்கள் அனைத்தும் விற்கப்பட்டு ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.