மலையாள மெகா ஹிட் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் ஜான்வி கபூர்.!எந்த படம் தெரியுமா .?

மலையாள சூப்பர் ஹிட் படமான ஹெலன் படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான்வி

By ragi | Published: Aug 02, 2020 12:42 PM

மலையாள சூப்பர் ஹிட் படமான ஹெலன் படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு மலையாளத்தில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் அன்னா பென் நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் 'ஹெலன்'. வினீத் ஸ்ரீநிவாசன் தயாரித்த இந்த படத்தில் அஜூ வர்க்கீஸ், லால் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள் சஸ்பென்ஸ் திரில்லராக உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

சமீபத்தில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமை அருண் பாண்டியன் வாங்கி தயாரிக்கவுள்ளதாகவும், அவரும், அவரது மகளான கீர்த்தி பாண்டியன் நடிப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஹெலன் படத்தினை இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், அதில் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாகவும் ,போனி கபூர் தயாரிக்க உள்ளதாகவும் ,அடுத்த ஆண்டு ஷூட்டிங் நடத்த திட்டமுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Step2: Place in ads Display sections

unicc